#BREAKING | புயல் உருவாவதில் திடீர் திருப்பம் - மணிக்கு இத்தனை கி.மீட்டர் வேகமா? சற்றுமுன் வெளியான அதிர்ச்சி செய்தி! - Seithipunal
Seithipunal


வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல் சின்னமாக வலுவடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த ஆறு மணி நேரத்தில், மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே நகர்ந்து, சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கு திசையில் 700 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று காலை வெளியிட்ட தகவலின் படி, மணிக்கு 15 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை புயல் சின்னமாக மாற வாய்ப்புள்ளதாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்ததாகவும், இதனால் புயல் சின்னமாக மாறுவதற்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நாளை காலை புயல் சின்னமாக வலுப்பெற்று, தென்மேற்கு வங்க கடல் பகுதியில், வட தமிழ்நாடு புதுச்சேரி, ஆந்திர கடலில் நிலை கொள்ளும் என்றும், இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 10ஆம் தேதி அன்று புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே, அதிகபட்சமாக மணிக்கு 85 கிலோமீட்டர் வேகத்தில் இந்த புயல் கரையை கடக்க கூடும் என்றும், இந்திய வானிலை ஆய்வு மையம் அந்த தகவல் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IMD alert For Cyclone 7122022


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->