ஐஎஃப்எஸ் நிதி நிறுவனத்தில் பணத்தை இழந்த வேலூர் இளைஞர் தற்கொலை! உருக்கமான கடிதம் சிக்கியது! - Seithipunal
Seithipunal



நிதி நிறுவனத்தில் பணத்தை இழந்த வேதனையில், வேலூரில் சேர்ந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அந்த இளைஞர் எழுதிய கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகிய பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐஎஃப்எஸ் என்ற நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை இழந்ததால், வேலூரை சேர்ந்த பிரசாத் என்ற இளைஞர் இன்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை செய்வதற்கு முன்பாக அவர் எழுதிய அந்த உருக்கமான தற்கொலை கடிதத்தில், என்னுடைய மரணத்திற்கு முழு காரணம் இந்த ஐஎஃப்எஸ்  நிதி நிறுவனம் தான் என்று தெரிவித்துள்ளார்.

பணத்தை இழந்தவர்களுக்கு மீட்டு திருப்பி கொடுக்க வேண்டும் என்று, தமிழக அரசு கோரிக்கை வைத்து கோரிக்கை வைத்துள்ளார் பிரசாந்த்.

12 லட்சம் ரூபாய் வரை வட்டி கொடுத்து கடன் சுமைகள் தவிர்த்து வந்த நிலையில், தற்கொலை முடிவு எடுத்ததாக இளைஞர் பிரசாந்த் வேதனையுடன் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட வெங்கடேசன் இடம் பணத்தை கொடுத்து தான் ஏமாந்ததாகவும் கடிதத்தில் பிரசாந்த் குறிப்பிட்டுள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IFS Loss Money Interest Loan


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->