நடத்தையில் சந்தேகம்: கணவனின் வெறிச்செயலால் இரத்த வெள்ளத்தில் மிதந்த மனைவி!
husband slashed his wife suspicion behavior
விருதுநகர், ராஜபாளையம் அருகே உள்ள கணபதி சுந்தரா நாச்சியார்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாச்சாமி (வயது 26) இவர் அதே பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி (வயது 23) என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் அய்யாச்சாமி மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் மனவேதனை அடைந்த மகாலட்சுமி 2 நாட்களுக்கு முன் கணவரை விட்டு பிரிந்து அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதனை அறிந்த அய்யாச்சாமி நேற்று காலை மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வந்த நிலையில் மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த அய்யாச்சாமி வீட்டில் இருந்த அரிவாளி எடுத்து மகாலட்சுமியை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த மகாலட்சுமி வலியால் கத்தி சத்தம் போட்டுள்ளார். இதனைக் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த சேத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலத்த காயம் அடைந்த மகாலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அய்யாச்சாமியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
husband slashed his wife suspicion behavior