திருப்பூர் அருகே கொடூரம்: 13 வயதுச் சிறுமிக்கு பாலியல் அக்கிரமம் இழைத்த நபரை சிறையிலடைத்த காவலர்கள்..! நடந்தது என்ன...? - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டம் கடத்தூர் ஆண்டிபாளையம் காலனியைச் சேர்ந்த 71 வயதான பழனி என்பவர், தற்போது திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த பழங்கரைப் பகுதியில் வசித்து வருகிறார்.

இந்தச் சூழலில், அவினாசியைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமிக்கு பழனி பாலியல் அத்துமீறல் இழைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

தனக்கு நேர்ந்த கொடுமையை சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், சம்பவம் குறித்து அவினாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளித்தனர்.

புகாரைப் பெற்ற காவலர்கள், சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் அடிப்படையில், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பழனி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 71 வயது பழனியை காவலர்கள் கைது செய்து, அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Horror near Tiruppur Police arrest man who harassment 13 year old girl What happened


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->