“என்னை ஏன் எப்போதும் ஆக்ஷன், த்ரில்லர் கதைகளிலேயே அடைத்து வைக்கிறீங்க?” – டாப்ஸி பண்ணுவின் நீண்ட நாள் ஆசை!
Why do you always box me into action and thriller stories Taapsee Pannu long standing wish
‘ஆடுகளம்’, ‘காஞ்சனா 2’, ‘வை ராஜா வை’ உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை டாப்ஸி பண்ணு. தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கவனம் பெற்றதைத் தொடர்ந்து பாலிவுட் பக்கம் சென்ற டாப்ஸி, அங்கும் பெண்களை மையப்படுத்திய ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் சீரியஸ் கதைகளைத் தேர்வு செய்து நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
சமீபத்தில் டாப்ஸி நடிப்பில் வெளியான ‘கங்காதரி’ திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. திரையரங்க வெளியீட்டைத் தொடர்ந்து நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இப்படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பார்வையை இழந்த நிலையில் கடத்தப்பட்ட தனது குழந்தையைத் தேடி போராடும் தாயின் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில் டாப்ஸியின் நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
‘கங்காதரி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, சமீபத்திய பேட்டி ஒன்றில் டாப்ஸி தனது மனதில் நீண்ட நாட்களாக இருந்த ஆசையை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.
ஒரு நடிகை ஏதாவது ஒரு சீரியஸ் அல்லது ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்து வெற்றி பெற்றுவிட்டால், தொடர்ந்து அதே மாதிரியான கதாபாத்திரங்களையே இயக்குநர்கள் அவரிடம் கொண்டு வருவதாக டாப்ஸி தெரிவித்துள்ளார்.
“ஒரு நடிகை ஏதாவது ஒரு சீரியஸ் அல்லது ஆக்ஷன் கேரக்டரில் நடித்து ஹிட் கொடுத்துவிட்டால், உடனே எல்லா இயக்குநர்களும் அதே மாதிரியான கதைகளை எடுத்துக்கொண்டு வந்துவிடுகிறார்கள். என்னை ஏன் எப்போதுமே த்ரில்லர், ஆக்ஷன், சீரியஸ் கதாபாத்திரங்களுக்குள்ளேயே பூட்டி வைக்கிறீர்கள்? வேறு கோணத்தில் என்னை வைத்து யோசிக்கவே மாட்டீர்களா?” என்று டாப்ஸி கேள்வி எழுப்பியுள்ளார்.
தன்னை ஒரு குறிப்பிட்ட வகை கதாபாத்திரங்களுக்குள் மட்டும் அடையாளப்படுத்தாமல், வேறு விதமான கதைகளிலும் பார்க்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என டாப்ஸி தெரிவித்துள்ளார்.
“எனக்கும் ஒரு அழகான, க்யூட்டான ரொமான்டிக் லவ் ஸ்டோரியில் நடிக்க வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசை இருக்கிறது. அதேபோல, திரையில் தாராளமான கவர்ச்சியைக் காட்டி, ரொமான்டிக் மற்றும் இன்டிமேட் காட்சிகளிலும் நடிக்க வேண்டும் என்பதும் என்னுடைய நீண்ட நாள் விருப்பம்” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், திரையுலகில் ஏராளமான காதல் திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில், தன்னை வைத்து மட்டும் ஏன் ஒரு அழகான காதல் கதையை யாரும் யோசிக்கவில்லை என்பது தனக்குப் புரியவில்லை என்றும் டாப்ஸி தெரிவித்துள்ளார்.
இதனால், ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் சீரியஸ் கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த தனது இமேஜை மாற்றி, முழுமையான காதல் நாயகியாக தன்னை வெளிப்படுத்தும் கதைக்காக டாப்ஸி காத்திருப்பது அவரது பேச்சின் மூலம் தெரியவந்துள்ளது.
நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வரும் இந்த வாய்ப்பு தனக்கு எப்போது கிடைக்கும் என்பதுதான் தற்போது டாப்ஸி ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
English Summary
Why do you always box me into action and thriller stories Taapsee Pannu long standing wish