கடுமையான வெயில் எதிரொலி! மாநில அரசுகளுக்கு சற்றுமுன் மத்திய அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் கடுமையான வெப்ப அலை வீசி வரும் நிலையில், வெயிலின் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தொழிலாளர்களுக்கு பணி நேரத்தை மாற்றி அமைக்க கோரி, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோடை வெப்பத்தை கருத்தில் கொண்டு தொழிலாளர்களின் பணிநேரத்தை மாற்றி அமைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், மாநில அரசுகளுக்கு மத்திய அரசாங்கம் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.

அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் தொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில், அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை செயலாளர் ஆர்த்தி கடிதம் எழுதியுள்ளார். 

அவரின் அந்த கடிதத்தில், சிறு மற்றும் பெரு நிறுவனங்கள் உள்ளிட்டவை பணியரத்தை மறு நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கட்டுமான தொழிலாளர்கள் உள்ள பகுதிகளில் அவசரக்கால ஐஸ்பேக், வெப்பநோய் தடுப்பு மருந்துகளை இருப்பு வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் சுரங்கப் பணிகள் நடைபெறும் இடங்களில் போதிய குடிநீர் மற்றும் ஓய்வெடுக்க தற்காலிக அறைகள் அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உடல்நிலை சரியில்லாத ஊழியர்களுக்கு வேலைப்பளு அதிகமாக வழங்க கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Heat Wave Issue Central Govt Order for State govt


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->