லாரி மீது மோதி அப்பளம் போல் நொறுங்கிய அரசு பேருந்து: பயணிகளின் கதி?
Govt bus collides with truck
சென்னையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு விரைவு பேருந்தை வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலபதி (வயது 43) ஓட்டி சென்றார்.
இந்த பேருந்து விக்கிரவாண்டி புறவழிச்சாலையில் நேற்று இரவு சென்று கொண்டிருந்தபோது பேருந்து திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி முன்னாள் சென்று கொண்டிருந்தால் லாரியின் பின்னால் மோதியது.
இந்த விபத்தினால் பேருந்தின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் பேருந்து ஓட்டுநர் வெங்கடாசலபதி, பயணிகள் உள்பட 6 பேர் காயமடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.
இந்த விபத்தினால் சாலையில் இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பின்னர் போலீசார் விபத்து ஏற்பட்ட வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
English Summary
Govt bus collides with truck