தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் முதுநிலை படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.

தமிழகத்தில் மொத்தம் 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிப்புகளில் நடப்பு ஆண்டில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கல்லூரி கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.  மேலும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள் உதவி மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய 93634 62070, 93634 62042, 93634 62007, 93634 62024 என்ற  எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Govt Arts and science college pg course apply online tomorrow


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->