தாய் இறந்த சோகம்.! தீக்குளித்த சிறுமி... அரியலூரில் பரிதாபம்.!
Girl commits suicide by fire setting herself in Ariyalur
அரியலூர் மாவட்டத்தில் தாய் இறந்த சோகத்தில் சிறுமி தீகுளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் இருகையூர் நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி ஆனந்தஜோதி. இவர்களது மகள் செல்வி (17). இந்நிலையில் ஆனந்த ஜோதி உடல்நல குறைவால் உயிரிழந்துவிட்டார். இதனால் கடந்த சில நாட்களாக செல்வி தாய் இறந்த சோகத்தில் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த செல்வி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் செல்வியை மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வி சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Girl commits suicide by fire setting herself in Ariyalur