கோவை : காரில் சென்று செயின் பறித்த கும்பல் - பெண்ணை தரதரவென்று இழுத்துச் செல்லும் அவலம்.!! - Seithipunal
Seithipunal


காரில் சென்று செயின் பறித்த கும்பல் - பெண்ணை தரதரவென்று இழுத்துச் செல்லும் அவலம்.!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு பகுதியில் ஹட்கோ காலணியைச் சேர்ந்தவர் கவுசல்யா. இவர் தன் கணவரோடு சேர்ந்து பீளமேடு அருகே உள்ள ஜி.வி.ரெசிடென்ஸி பகுதியில் நடைபயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

ஆனால், அவரது கணவர் வெளியூர் சென்றுவிட்டதால், கவுசல்யா மட்டும் தனியாக நடைப்பயிற்சி செய்துகொண்டிருந்தார், அப்போது, கவுசல்யாவை ஒரு கார் பின் தொடர்ந்து வந்தது.

இதையடுத்து, காரில் வந்த மர்மநபர்கள் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் திடீரென, கவுசல்யா கழுத்தில் அணிந்திருந்த செயினைப் பறிக்க முயன்றனர். உடனே கவுசல்யா செயினை இருக்கமாகப் பிடித்துக் கொண்டார். 

உடனே மர்ம நபர்கள் காரை மெதுவாக நகற்றியுள்ளனர். இதில், கவுசல்யா தரதரவென்று இழுத்துச் செல்லப்பட்டார். சிறிது தூரத்திற்கு பிறகு மர்ம நபர்கள் கவுசல்யாவை விட்டதால், அவர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். இந்தக் காட்சிகள் அனைத்தும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி யுள்ளது.

இதைத்தொடர்ந்து கவுசல்யா சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி சமூக ஊடகங்களில் பரவி வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

gang snatched chain to woman in coimbatore vedio viral


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->