வாட்ஸ் அப் குரூப்பில் கிண்டல் செய்ததால் விரக்தி; கல்லூரி மாணவன் எடுத்த விபரீத முடிவு! - Seithipunal
Seithipunal


கல்லூரி வகுப்பு வாட்ஸ் அப் குரூப்பில்  3 மாணவர்கள் கேலி, கிண்டல் செய்தது உறுதியானது. மாணவர்களின் கிண்டலால் விரக்தியடைந்த மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டம் மாதநாயகனஹள்ளி பகுதியை சேர்ந்த அருண்  அப்பகுதியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார்.இந்தநிலையில் 22 வயதான அருண், கடந்த 11ம் தேதி கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்த  தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார்,  அருணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், தற்கொலை செய்துகொண்ட மகனின் செல்போனை அருணின் பெற்றோர் ஆய்வு செய்தனர். அப்போது, கல்லூரி வாட்ஸ் அப் குரூப்பில் அருணை அவரது வகுப்பில் படித்து வந்த 3 மாணவர்கள் கேலி, கிண்டல் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து இது குறித்து அருணின் பெற்றோர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அப்போது செல்போனை போலீசார் ஆய்வு செய்தபோது அதில், கல்லூரி வகுப்பு வாட்ஸ் அப் குரூப்பில் அருணை அவரது வகுப்பை சேர்ந்த 3 மாணவர்கள் கேலி, கிண்டல் செய்தது உறுதியானது.மேலும்  மாணவர்களின் கிண்டலால் விரக்தியடைந்த அருண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அருணை தற்கொலைக்கு தூண்டியதாக 3 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Frustration due to mockery in the WhatsApp group a college student took a drastic decision


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->