பணம் கொடுப்பதாக அழைத்து நண்பனையே போட்டுத் தள்ளிய நபர் கைது.!
Friend killed for money in theni
தேனி மாவட்டம் கூடலூர் முத்தையர் தெருவை சேர்ந்தவர் அய்யனார் மகன் நாகேந்திரன். இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக ஊர்க்காவல் படை வீரராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தேவ கனி என்ற பெண்ணை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு தற்போது வரை குழந்தை இல்லை.
இதில் நாகேந்திரனின் நண்பர் பிரகாஷ். வெளிநாட்டில் வேலை செய்த பிரகாஷ் கொரோனா சமயத்தில் சொந்த ஊருக்கு வந்து நிலையில், தற்போது கூலி வேலை செய்து வருகிறார். என்ன நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகேந்திரனின் லேப்டாப்பை பிரகாஷ் வாங்கி சென்று பழுதாகி கொடுத்துள்ளார்.
இதனால் நாகேந்திரன் பிரகாஷிடம் சண்டை போட்டு உள்ளார். அதன் பின்னர் மீண்டும் நாகேந்திரனிடம் இருசக்கர வாகனத்தை வாங்கி சென்று அதனையும் பழுதாக்கி கொடுத்துள்ளார். இதனால் லேப்டாப் மற்றும் இருசக்கர வாகனத்தை பழுது நீக்கியதற்கான தொகையை பிரகாஷிடம் நாகேந்திரன் அடிக்கடி கேட்டு வந்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு நாகேந்திரனுக்கு போன் செய்த பிரகாஷ் பணம் தருவதாக கூறி அழைத்துள்ளார். இதனை நம்பி நாகேந்திரன் வெளியே சென்றுள்ளார்.
அப்போது தான் மறைத்து வைத்திருந்த அறிவாளால், நாகேந்திரனை சரமாரியாக பிரகாஷ் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த நாகேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பின்னர் தான் வெட்டிய அரிவாளுடன் கூடலூர் டவுன் வடக்கு காவல் நிலையத்தில் பிரகாஷ் சரணடைந்துள்ளார்.
English Summary
Friend killed for money in theni