கொட்டித் தீர்க்கும் மழை - 4 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை.!
four districts school holiday for heavy rain
கடந்த சில நாட்களாகவே வடகிழக்கு பருவமழை நாளுக்கு நாள் தீவிரமடைந்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

அதிலும் குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கனமழையினால் அவ்வப்போது பள்ளிகளுக்கு விடுமுறையும் விடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
four districts school holiday for heavy rain