நள்ளிரவில் பயங்கரம் - எலக்ட்ரீசியன் வெட்டிக் கொலை - பிரபல ரவுடி உள்பட   5 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


நள்ளிரவில் பயங்கரம் - எலக்ட்ரீசியன் வெட்டிக் கொலை - பிரபல ரவுடி உள்பட  5 பேர் கைது.!

சென்னை பெரும்பாக்கத்தில் எழில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. எலக்ட்ரீஷனாக பணிபுரிந்து வந்த இவர் நேற்று இரவு வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். இதையடுத்து அவர் எழில் நகர் வழியாக சென்ற போது அங்கு மதுபோதையில் இருந்த ஐந்து பேர் ராஜாவை வழிமறித்து வீண் தகராறில் ஈடுபட்டனர். 

சிறிது நேரத்தில் இந்தத் தகராறு கைகலப்பாக மாறியது. இதில் மது போதையில் இருந்த ஐந்து பேர் கல் மற்றும் கத்தியால் ராஜாவை அடித்து, சராமாரியாக வெட்டி விட்டு தப்பித்து ஓடிவிட்டனர். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனே அவர்களை விரட்டிச் சென்றனர். 

அதில், ஒருவர் கால் தடுமாறி கீழே விழுந்துள்ளார். அவரை பிடித்து வைத்து கொண்ட பொதுமக்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் படி விரைந்து வந்த போலீஸார் உயிருக்குப் போராடிய ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அங்கு ராஜா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து எழில் நகரை சேர்ந்த ரவுடி கோபி, சத்யா. மகபூல், செல்வம், பாட்ஷா உள்ளிட்ட  ஐந்து பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் கைது செய்யப்பட்ட கோபி சரித்திர பதிவேடு குற்றவாளி என்றும், அவர் பி கேட்டகிரி ரவுடி என்பதும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த நபரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five peoples arrested for electrician murder in chennai perumpakkam


கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?Advertisement

கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?
Seithipunal
-->