நெல்லை அருகே அட்டைத் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து.!
fire accident in nellai cardboard factory
நெல்லை அருகே அட்டைத் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து.!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூர் கரையிருப்பு அருகே பால்கட்டளை பகுதியில் தனியாருக்கு சொந்தமான அட்டை தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்தத் தொழிற்சாலையில், நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த தொழிற்சாலையில் இன்று மதியம் மின் கசிவு காரணமாக தீடிரென தீ பற்றி எரிந்தது. இதைப்பார்த்த பணியில் இருந்த ஊழியர்கள் உடனே தீயை அணைக்க முயன்றனர்.

ஆனால், தீ கட்டுக்கடங்காமல் தொழிற்சாலை முழுவதும் மளமளவென பரவியது. உடனே இந்த சம்பவம் குறித்து, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் படி, தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் பல லட்சம் மதிப்பிலான அட்டைகள் தீயில் கருகி நாசமானது. இன்டரஹச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
fire accident in nellai cardboard factory