#கும்பக்கோணம் || தி சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் தீ விபத்து.!!
Fire accident at kumbakonam the chennai Silks store
தஞ்சாவூர் மாவட்டம் கும்பக்கோணத்தின் சிந்தன் நகர் புதிய ரயில்வே சாலையில் அமைந்துள்ள தி சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 7 மாடிகள் கொண்ட இந்த துணிக்கடையின் மேல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
தீ விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
English Summary
Fire accident at kumbakonam the chennai Silks store