கடல் வழியாக கடத்தப்பட்ட 15 கிலோ தங்கம் - கையும் களவுமாக சிக்கிய டீக்கடை தொழிலாளி.!
fifteen kg gold seized in ramanathapuram
கடல் வழியாக கடத்தப்பட்ட 15 கிலோ தங்கம் - கையும் களவுமாக சிக்கிய டீக்கடை தொழிலாளி.!
இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கும், தமிழகத்துள் இருந்து இலங்கைக்கும் தங்கம், போதைப் பொருள், கடல் அட்டை, நட்சத்திர ஆமை உள்ளிட்டவை கடத்துவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனைத் தடுக்கும் விதமாக கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், கடத்தல் நடைபெறுகிறது. அந்தக் கடத்தல் பொருட்களை காவல்துறையினரும், சுங்கத்துறை அதிகாரிகளும் கைப்பற்றும் சம்பவமும் நடைபெறுகிறது.

இந்த நிலையில், இலங்கையில் இருந்து ராமநாதபுரத்திற்கு கடல் வழியாக கடத்திவரப்பட்ட 15 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இலங்கையில் இருந்து களிமண்குண்டு கடற்கரை பகுதிக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் அப்பகுதிக்கு விரைந்துச் சென்ற சுங்கத்துறை அதிகாரிகள் 15 கிலோ தங்கத்தை கைப்பற்றி, சம்பவம் தொடர்பாக மண்டபம் பகுதியைச் சேர்ந்த டீக்கடை தொழிலாளி சல்மான்கான் என்ற இளைஞரை கைது செய்தனர்.
அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதே பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பல கோடி மதிப்பிலான தங்கம் பிடிபட்ட நிலையில், தற்போது மீண்டும் 15 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
English Summary
fifteen kg gold seized in ramanathapuram