விஸ்வரூபம் எடுக்கும் காவிரி விவகாரம்! ரயில் மறியலில் குதித்த விவசாயிகள்! டெல்டா மாவட்டங்களில் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் இன்று டெல்டா மாவட்டம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.  காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டும் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடவில்லை. காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கர்நாடக அரசின் பிரதிநிதிகள் தமிழக விவசாயிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டை சுமத்தி வருகின்றனர். குறிப்பாக குறுவை சாகுபடி என்ற பெயரில் காவிரி நீரை தமிழக விவசாயிகள் வீணடித்து விட்டார்கள் என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.

இதைத் தட்டிக் கேட்க வேண்டிய மத்திய அரசும் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு எதிராக சதி திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு எதிராக காவிரி பிரச்னையில் தமிழக விவசாயிகளை அழிக்கும் நோக்கோடு அரசியல் சுயலாபத்துக்காக துரோகம் செய்கிறது எனவும், உச்சநீதிமன்ற வழக்கு தீர்ப்பும் தமிழ்நாட்டுக்கு சாதகமாக இருக்காது, இதனால் தமிழ்நாடு சம்பாவை சாகுபடியையும் இழக்க நேரிடும் என்ன விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

எனவே தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் மத்திய அரசையும், கர்நாடக அரசையும் கண்டித்து டெல்டா மாவட்டங்கள் முழுவதும் இன்று ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர் பாண்டியன் தலைமையில் இந்த போராட்டமானது நடைபெற உள்ளது. 

இன்று காலை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து மனவலித்துள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Farmers train strike in delta districts for cauvery water issue


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->