பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயம் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு.!!
Evening classes now compulsory for 10th 11th and 12th class students
பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து தமிழக முழுவதும் 2023-2024ம் கல்வியாண்டுக்கான பள்ளிகள் ஜூன் 1ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டு 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு 12ம் தேதியும், 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு கடந்த 14ம் தேதியும் வகுப்புகள் தொடங்கப்பட்டது.

இந்த நிலையில் 10, 11, 12 வகுப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளதை அடுத்து அந்த மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்றும் அனைத்து உயர்நிலை , மேல்நிலைப் பள்ளிகளிலும் மாலை நேர வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. மேலும் இந்த மாலை நேர வகுப்புகள் மாலை 5 வரை, அல்லது மாலை 5.30 மணி வரை நடத்தப்பட வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
English Summary
Evening classes now compulsory for 10th 11th and 12th class students