ஜெபகூட்டம், தாக்குதல்! தமிழக அரசுக்கு தாக்கல் ஆகபோகும் பரபரப்பு அறிக்கை! - Seithipunal
Seithipunal


சென்னிமலை அருகே ஜான் பீட்டர் என்பவர் தாக்கப்பட்டது குறித்து தமிழக அரசிடம் நாளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று, சுப வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை பகுதியின் ஒரு வீட்டில் ஜெபக்கூட்டம் நடந்துள்ளது. திடீரென இந்த கூட்டத்தில் புகுந்த மர்ம நபர்கள் ஜான் பீட்டர் என்பவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதல் சம்பவம் குறித்து ஜான் பீட்டர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் 4 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஜான் பீட்டர் என்பவர் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் அரச்சலூரைச் சேர்ந்த ராஜா, தமிழரசு ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், ஜான் பீட்டர் தாக்கப்பட்டது பற்றி நேரில் ஆய்வு செய்த பின் அரசின் சமூக நீதி கண்காணிப்பு குழு தலைவர் சுப வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் தெரிவிக்கையில், ஜான் பீட்டர் என்பவர் தாக்கப்பட்டது குறித்து தமிழக அரசிடம் நாளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode John Pandiayan Attack case


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->