செய்தி கேட்ட அடுத்த நொடி., இறப்பிலும் ஒன்றாக சென்ற தமிழக தம்பதி.!  - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் கணவன் இறந்த செய்தியை அறிந்த அடுத்த நொடியே மனைவியும் மயக்கமடைந்து உயிரைவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்து உள்ள முள்ளம்பட்டி ஓலப்பாளையத்தை சேர்ந்தவர் மாணிக்கம். இவருக்கு வயது 75 விவசாயம் செய்துவரும் மாணிக்கத்தின் மனைவி பெயர் முத்தாயம்மாள். அவருக்கு வயது 71. 

இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக போல மாணிக்கம் மற்றும் முத்தாயம்மாள் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று காலை மாணிக்கம் தன்னுடைய விவசாய தோட்டத்தில் மயங்கி கீழே விழுந்து அதே இடத்தில் இறந்து விட்டதாக தெரிகிறது.

மாணிக்கம் உடன் யாரும் இல்லாத காரணத்தினால், அவர் இறந்த செய்தி யாருக்கும் தெரியவில்லை. மாலை 6 மணி அளவில் அந்த வழியாக சென்ற சிலர் அவரை இறந்து கிடப்பதை பார்த்து அக்கம்பக்கத்து வீட்டுக் காரர்களுக்கும் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த செய்தியை கேட்ட மாணிக்கத்தின் மனைவி முத்தாயம்மாள் அடுத்த நொடியே மயங்கி விழுந்து அவரும் இறந்துவிட்டார்.

கணவன் செய்து இறந்த செய்தி அறிந்ததும் மனைவியும் அடுத்த நொடியே மயங்கி விழுந்து உயிரை விட்ட சம்பவம், அந்த கிராமத்தை மட்டுமில்லாமல், மாவட்ட மக்களையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதே சமயத்தில் இறப்பிலும் இணை பிரியாத ஜோடி என்றும் மாவட்ட மக்கள் பேசி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

erode couple dead in same time


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->