ஈரோடு | மர்ம காய்ச்சலால் பலியான 8 மாத பெண் குழந்தை!
Erode 8 month baby died mysterious fever
ஈரோடு, சிவகிரி அருகே உள்ள தாண்டாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுகுமார். இவரது மனைவி கவுரி. இவர்களுக்கு 9 வயதில் ஒரு ஆண் குழந்தை மற்றும் 8 மாத பெண் குழந்தை உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் குழந்தைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் பெற்றோர் குழந்தையை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டது.

மேலும் குழந்தை மர்ம காய்ச்சலால் உயிரிழந்துள்ளது தெரியவந்தது. இதனை அடுத்து குழந்தையின் வீடு அமைந்துள்ள பகுதிகளில் வாழும் பொது மக்களுக்கு பரிசோதனை நடத்தி தடுப்பு மருந்துகளை சுகாதாரத் துறையினர் வழங்கினர்.
மர்ம காய்ச்சலால் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Erode 8 month baby died mysterious fever