காய்கறி சந்தையில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார் எடப்பாடி பழனிசாமி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி என்று மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், திருவண்ணாமலை அ.தி.மு.க. வேட்பாளர் கலியபெருமாளை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். 

அதாவது, திருப்பத்தூரில் உள்ள காய்கறி சந்தை பகுதியில் நடந்து சென்ற எடப்பாடி பழனிசாமி அங்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் அருகில் உள்ள பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் நடந்து சென்றவாறு பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eps vote collect in thirupathur vegetable market


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->