சந்திராயன்-3ன் வெற்றி.!! ஸ்வீட் கொடுத்து கொண்டாடிய ஈபிஎஸ்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-3 மின்கலத்தை கடந்த ஜூலை 14ஆம் தேதி விண்ணில் ஏவிய நிலையில் நேற்று மாலை சரியாக 6:03 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் இத்தகைய மகத்தான சாதனைக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதேபோன்று பொதுமக்கள் இஸ்ரோவின் சாதனைக்கு வாழ்த்து தெரிவித்ததோடு பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி சந்திராயன்-3 திட்டத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக அனைவருக்கும் இனிப்பு வழங்கியுள்ளார்.

சேலத்தில் உள்ள தனது வீட்டில் கூடியிருந்த கட்சித் தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும் இனிப்பு வழங்கி சந்திராயன்-3 திட்டம் வெற்றி பெற்றதை கொண்டாடியுள்ளார். அப்போது முன்னாள் அமைச்சர்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

EPS celebrated Chandrayaan3 mission success with sweets


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->