தமிழக அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
Enforcement department investigation in places owned by the Tamil Nadu minister
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான முறைகேடு வழக்கில் இருந்து அமைச்சரை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், மீண்டும் விசாரணை நடத்தி வழக்கை முடிக்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.
இந்தநிலையில் சென்னை பசுமைவழிசாலையில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் திருவல்லிகேணியில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்பட ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை அதிகார்கள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக சென்னை பசுமைவழிசாலையில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்ற நிலையில், காவலர்கள் அங்கு சோதனை செய்ய அனுமதி மறுப்பு தெரிவித்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.
English Summary
Enforcement department investigation in places owned by the Tamil Nadu minister