இமயத்தின் இல்லத்தில் உணர்ச்சிப் பெருக்கு...! கங்கை அமரன் கோபப்படக் காரணம் என்ன...? ஓடிவந்து தடுத்த நடிகை ராதிகா! நடந்தது என்ன...?
Emotions running high Himalayas house What reason Gangai Amaran anger Actress Radhika ran stop him What happened
தமிழ் திரையுலகின் கிராமத்து காவியங்களை வெள்ளித்திரையில் உயிர்ப்பித்த இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 84.சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்த பாரதிராஜாவின் மறைவு செய்தி வெளியாகியதும் திரையுலகமே சோகத்தில் மூழ்கியது. அரசியல் தலைவர்கள், திரைப்பட நட்சத்திரங்கள், இயக்குநர்கள், கலைஞர்கள் மற்றும் ஏராளமான ரசிகர்கள் நேரில் சென்று தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

பாரதிராஜாவின் கலைச் சேவையை கவுரவிக்கும் வகையில் அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.இந்த நிலையில், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த பாரதிராஜாவின் உடலை கண்டு அவரது மனைவி மிகுந்த துயரத்தில் உடைந்து போனார்.
“என்னைத் தனியாக விட்டுவிட்டு சென்றுவிட்டீர்களே...” என்று கண்ணீர் மல்க கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களின் இதயங்களை கனக்கச் செய்தது.அப்போது அருகில் நின்றிருந்த இசையமைப்பாளர் கங்கை அமரனும் தனது வேதனையை அடக்க முடியாமல் உணர்ச்சிவசப்பட்டார்.
“இறுதி நேரத்தில் யாரும் அருகில் இல்லாமல் தனியாகப் பிரிந்து சென்றுவிட்டாரே... அழைத்தபோதும் தொடர்பு கொள்ள முடியவில்லை... அவர் மறைந்த பிறகுதான் அனைவரும் வந்து நிற்கிறார்கள்... இதை நினைக்கும்போது மனம் மிகவும் வலிக்கிறது... எவ்வளவு பெரிய கலைஞர், ஆனால் இறுதி தருணம் இப்படி அமைந்துவிட்டதே...” என உருக்கத்துடன் பேசியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
கங்கை அமரனின் அந்த வேதனை நிறைந்த வார்த்தைகள் அங்கு நிலவிய சோகத்தை மேலும் அதிகரித்தன. அந்த தருணத்தில் அருகில் இருந்த நடிகை ராதிகா, அவரை அமைதிப்படுத்தும் வகையில் தோளில் கை வைத்து ஆறுதல் கூறினார்.
மேலும், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் எதுவும் பேச வேண்டாம் என சமாதானப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையுலகிற்கு மட்டுமல்லாமல், கலை உலகிற்கே பேரிழப்பாக கருதப்படும் நிலையில், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து திரண்டு வருகின்றனர்.
English Summary
Emotions running high Himalayas house What reason Gangai Amaran anger Actress Radhika ran stop him What happened