சென்னையில் அதிர்ச்சி மோசடி...! 30% வட்டி தருவதாக ஆசை காட்டி பெண்ணிடம் ரூ.23 லட்சம் சுருட்டிய முன்னாள் வங்கி பெண் ஊழியர் கைது...! - Seithipunal
Seithipunal


சென்னையில் அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டி பெண்ணிடம் ரூ.23 லட்சம் முதலீடு பெற்றதுடன், போலி இணையதளம் மற்றும் வங்கிக் கணக்கு மூலம் பணத்தை சுருட்டியதாக தனியார் வங்கி முன்னாள் பெண் ஊழியரை காவலர்கள் கைது செய்தனர்.சென்னையைச் சேர்ந்த ஹேமா பிரியதர்ஷினி (40) என்பவருக்கு, கடந்த 2024-ம் ஆண்டு அவரது உறவினர் மூலம் பூஜா ஜெயின் (39) என்பவர் அறிமுகமாகியுள்ளார்.

தனியார் வங்கிகளில் வாடிக்கையாளர் தொடர்பு மேலாளராக பணியாற்றிய அனுபவம் கொண்ட பூஜா ஜெயின், ‘ஐ.பி.எல். பண்ட்’ என்ற திட்டத்தில் பணத்தை முதலீடு செய்தால் 30 சதவீதம் வரை அதிக வட்டி கிடைக்கும் என்று ஹேமா பிரியதர்ஷினியிடம் தெரிவித்துள்ளார்.இதனை நம்பிய ஹேமா, முதற்கட்டமாக ரூ.15 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். அந்த தொகைக்கு வட்டி வழங்கப்பட்டதால், அவர் பூஜா ஜெயின் மீது மேலும் நம்பிக்கை வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கூடுதலாக பணத்தை முதலீடு செய்யுமாறு பூஜா ஜெயின் வற்புறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து கடந்த 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் ஹேமா மேலும் ரூ.8 லட்சத்தை முதலீடு செய்துள்ளார்.ஆனால், இந்த முறை வட்டி தொகை எதுவும் வழங்கப்படவில்லை.இதனால் சந்தேகமடைந்த ஹேமா, பூஜா ஜெயினிடம் பணம் குறித்து விசாரித்துள்ளார்.

அதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் நஷ்டத்தைச் சந்தித்துவிட்டதாக அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஹேமா, சென்னை மேற்கு மண்டல இணையவழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது, பூஜா ஜெயின் தனது வங்கி பணிப் பின்னணியைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் தகவல்களைச் சேகரித்தது தெரியவந்தது.

அந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, ‘இந்தியா பாண்ட்ஸ் லிமிடெட்’ என்ற பெயரில் போலியான இணையதளத்தை உருவாக்கியுள்ளார். மேலும், முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் ‘ஐ.பி.எல். அண்ட் கோ’ என்ற பெயரில் போலியான நடப்புக் கணக்கையும் தொடங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

முதலீட்டாளர்களிடம் இருந்து பெறப்பட்ட பணத்தை அந்தக் கணக்கில் செலுத்தச் செய்து, பின்னர் அத்தொகையை தனது சொந்த வங்கிக் கணக்குக்கு மாற்றிக் கொண்டதாகவும் காவலர்கள் தெரிவித்தனர்.இதையடுத்து சென்னை பார்க் டவுன், மின்ட் தெருவைச் சேர்ந்த பூஜா ஜெயினை காவலர்கள் கைது செய்தனர்.

மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 2 செல்போன்கள் மற்றும் ஒரு மடிக்கணினி ஆகியவை அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.மேலும், பூஜா ஜெயின் மீது ஏற்கனவே நுங்கம்பாக்கம், கொளத்தூர் காவல் நிலையங்கள் மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவில் மோசடி தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட பூஜா ஜெயினை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த காவலர்கள், இந்த மோசடி சம்பவத்தில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai Former bank employee arrested duping woman 23 lakhs by promising 30percentage interest


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->