தமிழகத்தின் அடையாளமாக உள்ள சிலையை திறந்து வைக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.!! - Seithipunal
Seithipunal


கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காகவும், வளர்ச்சி பணிகள் துவங்குவதற்காகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று புதுக்கோட்டை மாவட்டம் செல்கிறார். 

இன்று காலை 10 மணி அளவில் விராலி மலையில் உள்ள ஐடிசி நிறுவனத்தை பார்வையிடுகிறார். பின்னர் விராலிமலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு நினைவு சிலையைத் திறந்துவைக்கிறார். அதன்பிறகு, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அத்துடன், நிறைவேற்றப்பட திட்டங்களையும் திறந்துவைக்க உள்ளார். 

அதன்பிறகு மாவட்டத்தின் வளர்ச்சி பணிகள் குறித்து  அரசு அதிகாரிகளுடன் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்கிறார். 

இதற்கு முன்னதாக கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, திருச்சி, மதுரை, நெல்லை, வேலூர், திண்டுக்கல், தென்காசி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று முதலமைச்சர் ஆய்வு பணிகளை மேற்கொண்டு உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edappadi palanisamy going to pudukottai


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->