கரூர் ரெய்டில் திடீர் டுவிஸ்ட்.. பூட்டு உடைத்து உள்ளே நுழைந்த ED அதிகாரிகள்.!! வசமாக சிக்கிய முக்கிய புள்ளி.!! - Seithipunal
Seithipunal


அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்பொழுது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு உதவியாளராக பணியாற்றி வந்த சங்கர் தொடர்புடைய கரூர் மாவட்டத்தின் 4 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக அவருடைய நிதி நிறுவனம், தனலட்சுமி மார்பிள்ஸ் கடை மற்றும் அதன் உரிமையாளரின் வீட்டிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் கரூரிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். அந்த வீட்டிற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்ற போது சங்கருடைய வீட்டில் யாரும் இல்லாததால் 2 மணி நேரம் காத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து அந்த வீட்டின் உரிமையாளர் நேமநாதன் என்பவரை வரவழைத்து மாற்று சாவியை கேட்டனர். மாற்று சாவி அவரிடம் இல்லாததால் அமலாக்க துறை அதிகாரிகள் அவரை சாட்சியாக வைத்து வீட்டின் பூட்டை உடைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 மணி நேரத்திற்கு மேலாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையில் பல டிஜிட்டல் ஆவணங்கள் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் வரும் வரை இந்த சோதனை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ED officials raid Senthil Balaji assistant house by break the lock


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?Advertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?
Seithipunal
--> -->