அன்பின் ஒளி உலகெங்கும் பரவட்டும்...! விஜயின் கிறிஸ்துமஸ் வாழ்த்து எக்ஸ் தளத்தில் வைரல்...!
May light love spread throughout world Vijays Christmas wishes go viral X
நாடு முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் திருநாள் உற்சாகமும் ஆனந்தமும் நிறைந்த சூழலில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தப் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்ததாவது,"மனித குலத்துக்கு அமைதி, கருணை, சகோதரத்துவம், நல்லிணக்கம் போன்ற உயரிய மதிப்புகளை போதித்து, உலகெங்கும் அன்பின் ஒளியாக விளங்கிய இயேசு கிறிஸ்து பிறந்த இந்த புனித நாளை கொண்டாடும் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகள் என அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
May light love spread throughout world Vijays Christmas wishes go viral X