தலைநகரை உலுக்கும் உண்மை...இரண்டு நாளில் சுவாசத் தொற்று...! டெல்லி காற்று மாசால் பாதிக்கப்பட்ட நிதின் கட்காரி...! - Seithipunal
Seithipunal


டெல்லி நகரம் டிசம்பர் தொடக்கத்திலிருந்தே கடுமையான காற்று மாசு பிடியில் சிக்கி தவித்து வருகிறது. வாரங்களாக நீடிக்கும் இந்த மாசு தாக்கம், பொதுமக்களின் சுவாச ஆரோக்கியத்தை பெரிதும் பாதித்து வருகிறது. மூச்சுத்திணறல், கண் எரிச்சல், தொண்டை வலி போன்ற பிரச்சினைகளால் மக்கள் அன்றாட வாழ்க்கையே கடினமாகி உள்ளது.

இந்த நிலையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரியும் காற்று மாசின் தாக்கத்தை நேரடியாக அனுபவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற மூத்த பத்திரிகையாளர் ஒருவரின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர்,“டெல்லியில் வெறும் இரண்டு நாட்கள் தங்கியதற்குள் எனக்கு சுவாசத் தொற்று ஏற்பட்டுவிட்டது.

ஏன் இந்த நகரம் இவ்வளவு மோசமான காற்று மாசில் சிக்கி தவிக்கிறது?” என வெளிப்படையாக கேள்வி எழுப்பினார்.

இதைத் தொடர்ந்து பேசிய அவர், “நான் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருப்பதால், மாசு ஏற்படுவதற்கான காரணங்கள் எனக்கு நன்றாக தெரியும்.

நாட்டின் காற்று மாசில் 40 சதவீதம் புதைபடிவ எரிபொருட்களால் ஏற்படுகிறது. அவற்றை இறக்குமதி செய்ய ஆண்டுதோறும் ரூ.22 லட்சம் கோடி செலவழிக்கிறோம்.

ஆனால் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று தொழில்நுட்பங்களை ஏற்க மக்கள் இன்னும் முன்வரவில்லை” என வருத்தம் தெரிவித்தார்.

டெல்லியில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், நகரின் பல பகுதிகளில் காற்று தரக் குறியீடு ‘மிக மோசம்’ என்ற அளவை எட்டியுள்ளது.

இதனால் பள்ளி மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். காற்று மாசு டெல்லிக்கான ஒரு நிரந்தர பேராபத்தாக மாறிவிடுமோ என்ற அச்சமும் வலுத்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

shocking truth that shaking capital Respiratory infection two days Nitin Gadkari affected by Delhi air pollution


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->