கர்நாடகா பேருந்து விபத்து: 17 உயிர்கள் பலி… பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி...! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா அருகே நிகழ்ந்த கோர விபத்தில், சொகுசுப் பேருந்து தீப்பற்றி எரிந்ததில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்னும் சிலர் பேருந்தின் உள்ளே சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த துயர சம்பவம் கர்நாடகா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,“கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

காயமடைந்தவர்கள் விரைவில் முழுமையாக குணமடைய வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விபத்தில் உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 உதவித் தொகை வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஓரளவு ஆறுதலாக அமைந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Karnataka bus accident 17 lives lost Prime Minister Modi announced relief affected families


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->