"தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் ஒழிக்கப்படும்" - ஸ்டாலின் உறுதி !! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சமீபகாலமாக அதிகமாக போதைப் பொருள்கள் புழங்குவது, தமிழகத்தின்  சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னை மட்டுமல்ல, சமூகப் பிரச்னையாகவும் உள்ளது என்றும், அதை ஒழிக்க மாபெரும் இயக்கம் தமிழகத்தில் தொடங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி கூறினார்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தபோது ஸ்டாலின் இவ்வாறு கூறினார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 14 மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டனர். மேலும் வரும் காலங்களில், மீதம் உள்ள மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்துவார்.

14 மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்துரையாடிய முதல் அமைச்சர் ஸ்டாலின், போதைப் பொருட்களின் பரவலை மாநில அரசு பெருமளவு கட்டுப்படுத்தியிருந்தாலும், அந்த நடவடிக்கை போதுமானதாக இல்லை என்றார். 

இந்த போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுத்து போதை பொருள் பரவலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினார்.

இதை குறித்து நிகழ்சி முடிந்தவுடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் பேசுகையில், '' புயலால் வீடுகளை இழந்த 1,360 பேருக்கு 4 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், தொழில் நஷ்டமடைந்த குடும்பங்களுக்கு கடன் வழங்கப்படுகிறது". என்று கூறினார்.

நிகழ்சி முடிந்தவுடன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பேசுகையில், "பயிர் சேதத்திற்கான இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு, இழந்தவர்களுக்கு வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அசல் தொலைந்தவர்களுக்கு புதிய சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன". என்று கூறினார்.

மேலும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் பேசுகையில்: பெரும்பாலான வீடுகள் கட்டும் பணி ஏற்கனவே முடிந்துவிட்டதாகவும், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டு வருவதாகவும், அவற்றை இழந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன". என்று கூறினார்.

இந்த கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

drugs will be eradicated from tamilnadu


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->