கோவை முழுமை திட்டம்.. வரவேற்று முதல்வருக்கு பாராட்டு தெரிவித்த பெயிரா! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூரில் இரண்டாவது முழுமை திட்டம் – 2041 ஐ இன்று வெளியிட்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர்.ஆ.ஹென்றி மனம் திறந்து பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில்..

தமிழ்நாட்டில் மாஸ்டர் பிளான் முழுமைத் திட்டத்தின் (MASTER PLAN) கீழ் நகரத்தின் மக்கள்தொகை பெருக்கத்தின் அடிப்படையில் மண்டல இணைப்புகளை மேம்படுத்துதல், சமூக மற்றும் பொருளாதார உத்திகளை வலுப்படுத்துதல், உட்கட்டமைப்பு பூர்த்தி செய்தல், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாத்தல், நில பயன்பாட்டினை வகைப்படுத்தி வரையறுத்தல், சாலைகள் மற்றும் பொது போக்குவரத்தினை மேம்படுத்துதல், மற்றும் பிற நகர்ப்புற மேம்பாட்டுத் தேவைகளைக் கருத்தில் கொண்டும் மற்றும் நகரத்தின் எதிர்கால வளர்ச்சி, முதலீடுகளை ஈர்ப்பது, உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பது மற்றும் நிலையான நகர்ப்புற வளர்ச்சியை உறுதி செய்வது போன்ற அம்சங்கள் நகர்ப்புற திட்டமிடல் இயக்குநரகத்தால் (Local Planning Authorities) தயாரிக்கப்பட்டு, தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அரசாணை எண்கள் (அரசாணை எண்.661 தேதி.12.10.1994 மற்றும் அரசாணை எண்.22, தேதி.27.1.2011) ஆக வெளியிட்டு அரசாங்கத்தின் ஒப்புதலுடன் மதிப்பாய்வு நகர்ப்புற திட்டமிடல் இயக்குநரகத்தால் செயல்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் Urban Planning Area Under Clause (48) of section 2, தமிழ்நாடு நகர ஊரமைப்புச் சட்டம் 1971ன் பிரிவு 35/1972 இன் அடிப்படையில் தான் தயாரிக்கப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு மாஸ்டர் பிளானும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருத்தப்பட வேண்டும். கோவை நகரில் தற்போது நடைமுறையில் உள்ள மாஸ்டர் பிளான், கடந்த 1994 ஆம் ஆண்டு அரசால் அங்கீகரிக்கப்பட்டு, நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.

இந்த முழுமை திட்டம் விரிவுப்படுத்துவது சம்பந்தமாக மேற்கண்ட எமது அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு அரசுக்கு முன் வைத்த தொடர் கோரிக்கையை ஏற்று,தமிழ்நாடு அரசு ஏற்கனவே உள்ள கோயம்புத்தூர் உள்ளூர் திட்ட குழுமத்தின் எல்லையை தற்போது விரிவுபடுத்தி, புறநகர் பகுதிகளை ஒருங்கிணைத்து கோவை புறநகர் வளர்ச்சி குழுமமாக மேம்படுத்தி கோவை மாநகராட்சி மற்றும் அதை சுற்றியுள்ள  உள்ளாட்சி அமைப்புகளுக்கான மாஸ்டர் பிளான் வரைவு தயாரித்து (முழுமை திட்டம்) இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று, இன்று 04.07.2025 இல் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் நகர் ஊரமைப்பு இயக்ககத்தால் புதியதாக தயாரிக்கப்பட்ட 1531.57 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கோயம்புத்தூர் உள்ளூர் திட்டப் பகுதியின் இரண்டாவது முழுமைத் திட்டத்தை (Coimbatore Master Plan 2041) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.

ஏற்கனவே 1287 சதுர கிமீ பரப்பளவுள்ள கோயம்புத்தூர் உள்ளூர் திட்டப் பகுதிக்கான முதல் முழுமைத் திட்டத்துக்கு 12.10.1994 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. பின்னர், இரண்டாவது முழுமைத் திட்டம் சம்பந்தமாக அரசாணை எண்கள். 41/2014, 130/2021, DTCP இயக்குனர் கடித எண். 13177/2022/TCP3, மற்றும் 197/2022, தேதி; 11.11.2022 இன் படி அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான வரைவு தயாரிக்கப்பட்டு, கடந்த 13.01.2024 அன்று அரசின் அனுமதி வழங்கப்பட்டது. அனுமதி பெறப்பட்ட முழுமைத் திட்டத்தின் வரைவு நகர் ஊரமைப்பு இயக்குனரகத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டும், கோவை டிடிசிபி அலுவலகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வெளியீட்டும் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் வரப்பெற்றதின் அடிப்படையில்

தற்போது, கோவை மாநகராட்சி, மதுக்கரை, கருமத்தம்பட்டி, கூடலூர் மற்றும் காரமடை ஆகிய நான்கு நகராட்சிகள், 21 நகரப் பஞ்சாயத்துகள் மற்றும் 66 வருவாய் கிராமங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய 1531.57  சதுர கிமீ பரப்பளவைக் கொண்ட, (அதாவது 3,78,458.60485 ஏக்கர் பரப்பளவு கொண்ட) கோயம்புத்தூர் உள்ளூர் திட்டப் பகுதிக்கு முதன்முறையாக புவியியல் தகவல் அமைப்பு அடிப்படையிலான கோயம்புத்தூர் இரண்டாவது முழுமைத் திட்டம் உருவாக்கப்பட்டு, இத்திட்டம் தரவுகளின் அடிப்படையில், இடம் சார்ந்த, துல்லியமான நகர திட்டமிடலை கொண்டு வடிவமைக்கப்பட்டு, மாநில அளவிலான 40-க்கும் மேற்பட்ட துறைகளின் ஒருங்கிணைப்பு மற்றும் பங்குதாரர் ஆலோசனைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும்,

இத்திட்டமானது, தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரக் கனவு, முழுமையான நகரப் போக்குவரத்து திட்டம் மற்றும் எதிர்வரும் 2041-க்குள் 33 சதவிகித பசுமை பரப்பளவை அடைவது போன்ற அரசின் முக்கிய கொள்கைகளுடன் ஒருங்கிணைத்து செயல்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும்,
கோயம்புத்தூர் இரண்டாவது முழுமைத் திட்டம் 2041, மண்டல இணைப்புகளை மேம்படுத்தல், சமூக மற்றும் பொருளாதார உத்திகள் வலுப்படுத்தல், உட்கட்டமைப்பு மற்றும் சமூக வசதிகள் மேம்படுத்தல், வீட்டு வசதிகளுக்கான தேவையை பூர்த்தி செய்தல், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாத்தல் ஆகியவற்றை முக்கிய நோக்கங்களாக கொண்டுள்ளது. ஒருங்கிணைந்த மற்றும் பங்கேற்பு அடிப்படையிலான திட்டமிடல் முறையின் மூலம், பல துறைகளின் திட்டங்களை செயல்முறைப்படுத்த தெளிவான காலக்கெடு மற்றும் திட்ட செலவு மதிப்பீட்டுடன் பகுதி வாரியாக தொகுக்கப்பட்டுள்ளன. இது திட்டங்களை நேர்த்தியாகவும், காலக்கெடுவில் செயல்படுத்தவும் வழிவகுக்கும் எனவும்,

இந்த கோயம்புத்தூர் முழுமைத் திட்டம்-2041, தமிழ்நாட்டின் நகர வளர்ச்சியை நோக்கமாக கொண்ட முக்கியமான அம்சமாகும். இம்முழுமைத்திட்டம், நீடித்த மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய மீள்தன்மை கொண்ட நகரமாக கோயம்புத்தூர் உருவாக்குவதற்கான அடித்தளத்தை அமைக்கிறது எனவும், இன்று 04.07.2025, தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு துறையின் செய்தி வெளியீடு எண் 1512 இன் செய்தி வெளியீடு மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
உள்ளபடியே சென்னைக்கு அடுத்தபடியாக மிகப்பெரும் அளவில்  நகரமயமாக்களில் குடியேறிய மக்கள் தொகை பெருக்கத்தின் அடிப்படையிலும்,  தொழில் புரட்சியிலும் வளர்ந்து வரும் கோவைக்கு முழுமை திட்டத்தை கொண்டு வந்து நடைமுறைப்படுத்தியமைக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் மற்றும் செயலாளர், டிடிசிபி இயக்குனர் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களுக்கும் எமது அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் சார்பில் உளம் நிறைந்த பாராட்டுகளையும், இதயபூர்வமான வாழ்த்துக்களையும், நெஞ்சம் நிறைந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அதேசமயம் ஏற்கனவே பல்வேறு நடப்பு திட்டங்கள் டிடிசிபி இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து உத்தரவு பெறும் தருவாயில் உள்ளது. இதற்கெல்லாம் எந்த வகையிலும் இடையூறும் – பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த புதிய முழுமை திட்டத்தில் இருந்து விலக்கு அளித்திட வேண்டும் எனவும்,
அதேபோன்று இந்த புதிய கோவை முழுமை திட்டம் 2041 இன் வரைவை பொது மக்களின் பார்வைக்கும் – கருத்துக்கும் – ஆலோசனைக்கும் வேண்டி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 2023 இல் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டபோது அங்கு கோவை மாவட்ட விவசாய அமைப்பினரால் ஆட்சேபனையும் மற்றும் முற்றுகை போராட்டமும் நடத்தப்பட்டு பல்வேறு வாக்குவாதங்களுடன் அந்தக் கூட்டம் முழுமை பெறாமல் நிறுத்தம் செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் இது சம்பந்தமாக கலந்தாய்வு கூட்டம் நடைபெறும் என காத்திருந்த பொதுமக்களுக்கு அதற்கான சூழலும் அமையவில்லை, போதிய வாய்ப்பு வழங்கவில்லை என அந்த பகுதியில் வசிக்கும் மக்களின் மனக்குமுறல்கள் வாயிலாக மேற்கண்ட எமது கூட்டமைப்பிற்கு தெரிய வருகிறது.
மேலும் இணையதளம் சம்பந்தமான போதிய விழிப்புணர்வு இல்லாத சமானிய மக்கள் கோவை புதிய முழுமை திட்டம் வரைவு சம்பந்தமாக தங்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் டிடிசிபி இணையதளத்தின் வாயிலாக  தெரிவிக்கவில்லை எனவும் தெரிய வருகிறது.
ஆகவே பெருமதிப்பிற்குரிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மேற்கண்ட பொதுமக்களின் மனக்குமுறல்களுக்கும் எதிர்பார்பிற்கும் மதிப்பளித்து மீண்டும் ஒரு முறை இது சம்பந்தமாக கோவை முழுமை திட்டம் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு மாத்திரம் வாய்ப்பளித்து அவர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்று, தற்போதைய முழுமை திட்டத்தில் உள்ள நில வகைபாடுகளை அப்பகுதி மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் கோவை முழுமை திட்டம் 2041 உடன் இணைத்து ஒரு துணை திட்டம் தயாரித்து வெளியிட வேண்டும் என தங்களை மேற்கண்ட எமது கூட்டமைப்பு பாராட்டுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Coimbatore Comprehensive Plan Congratulations to the Chief Minister on the welcome


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->