புதிய பேருந்து நிலையம் கட்டுமானத்தில் கோடிக்கணக்கில் ஊழல்.. சிபிஐ விசாரணை நடத்த நாராயணசாமி  வலியுறுத்தல்! - Seithipunal
Seithipunal


புதிய பேருந்து நிலையம்  கட்டுமானத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளது, கோடிக்கணக்கில் நடைபெற்றுள்ள  ஊழல் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்  என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை காங்கிரஸ் கட்சியினர் ஆய்வு செய்தனர்.காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர்  வைத்திலிங்கம் எம்.பி தலைமையில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன், துணைத்தலைவர் அனந்தராமன் உள்ளிட்ட நிர்வாகிகள்  நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:புதிய பேருந்து நிலையம்  கட்டுமானத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளது, கோடிக்கணக்கில் நடைபெற்றுள்ள  ஊழல் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்,

வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 20-தொகுதிகளில் போட்டியிடும் ,ஆளும் அரசின் ஊழல்குற்றச்சாட்டுகளை பொதுமக்களிடம் தெரிவித்து ஆட்சியை அகற்ற வேண்டும்.காங்கிரஸ் கட்சியில் பிரிவினை மற்றும் பிளவு உள்ளதாக தெரிவிக்கின்றனர் ஆனால் பாஜகவில் 4-அணிகள் உள்ளது.

கடந்த ஆட்சியில் சொகுசு கப்பலுக்கு எதிர்ப்பு தெரிவித்த ரங்கசாமி தற்போது பாதுகாப்பு கொடுப்பது மட்டுமின்றி அரசு செயலர் சுற்றுலாப்பயணிகளை வரவேற்கிறார்.எந்த காலத்திலேயும் ரங்கசாமி பிஜேபி கூட்டணியில் இருந்து வெளியே போக மாட்டார்.

காங்கிரஸ் கட்சி தன்மானத்தை விட்டுக்கொடுக்காது, வரும் சட்டமன்ற தேர்தலில் 20-தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றிபெறும்  என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Millions of corruption in the construction of the new bus station Narayanasamy insists on conducting a CBI investigation


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->