2 கோடி மதிப்புள்ள யானைத்தந்தம் பறிமுதல் - 8 பேர் கைது.!!
2 crores worthable elephant ivory seized near chengalpat
பரனூர் அருகே இரண்டு கோடி மதிப்புள்ள யானை தந்தம் கடத்தி வந்த எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பரனூர் வழியாக யானை தந்தம் கடத்தி வரப்படுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் பரனூர் சுங்கச்சாவடியில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.


அப்போது சந்தேகப்படும் விதமாக கார் ஒன்று அதிவேகமாக வந்துகொண்டிருந்தது. இதைப்பார்த்த அதிகாரிகள் அந்தக் காரைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் ரூ.2 கோடி மதிப்புள்ள யானை தந்தம் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அதனை பறிமுதல் செய்த போலீசார் யானை தந்தத்தை கடத்தி வந்த ஒரு பெண் உட்பட 8 பேரை கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட 8 பேரும் பெங்களூரு மற்றும் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் யானை தந்தம் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
2 crores worthable elephant ivory seized near chengalpat