வரும் திங்கள் கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறையா? தமிழக அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது! - Seithipunal
Seithipunal


மொஹரம் பண்டிகை ஜூலை 6, 2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறவுள்ளதாகத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதன் பெயரில் ஜூலை 7, 2025 (திங்கட்கிழமை) அரசு விடுமுறை என சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானது என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஜூலை மாதம் தொடங்கியதிலிருந்து மொஹரத்தைப் பற்றிய பல தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனையடுத்து, கடந்த ஜூன் 26-ஆம் தேதி காயல்பட்டினத்தில் மொஹரம் மாத பிறை காணப்பட்டதைத் தொடர்ந்து, ஜூன் 27-ஆம் தேதி மொஹரத்தின் முதல் நாள் என ஷரியத் முறைப்படி அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு தலைமை காஜி வெளியிட்ட தகவலின்படி, யொமே ஷஹாதத் நாள் ஜூலை 6, 2025 (ஞாயிற்றுக்கிழமை) ஆகும். அந்நாள் ஏற்கனவே வார விடுமுறையாக இருப்பதால், அதன் மறுநாள் திங்கட்கிழமை (ஜூலை 7) அரசு விடுமுறை அல்ல.

இதற்கிடையில், 07-07-2025 அரசு விடுமுறை என பரவும் தகவல் வதந்தியாகும். பொது மக்கள் இதனை நம்பாமல் தவறான செய்திகளை பகிர வேண்டாம் என அரசின் உண்மைச் சரிபார்ப்பகம் கேட்டுக்கொண்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

moharam sunday oinlu leave Monday no leave TN Govt


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->