திருப்பனந்தாள் காசிமடம் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் மகா சமாதி அடைந்துள்ளார்..! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளில் காசிமடத்தின் 21-வது அதிபராக 'கயிலை மாமுனிவர்', ஸ்ரீலஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் எனும் முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள், 95 வயதில் சமாதி அடைந்துள்ளார். 

குறித்த மடத்தில் சைவம் தமிழ், கலை, இலக்கிய சமூக, சமுதாயப் பணிகள் மற்றும் அறம் வளர்க்கும் அருள் நிலையமாக உள்ளது. முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள்,1958 முதல் துறவேற்று, சிறிது காலம் ஸ்ரீகாசிமடத்தின் இளவரசாகப் பணிபுரிந்து, கடந்த 1972-இல் ஸ்ரீகாசிமடத்தின் அதிபரானார்.

சைவம், தமிழ் இரண்டையும் இரண்டு கண்களாகப் போற்றி, 50 ஆண்டுகளுக்கும் மேலாக, திருமுறைகளை நாள்தோறும் பாராயணம் செய்து வந்த இவர், 300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையும், பெருமையும் மிக்க காசிமடம் வரலாற்றில், மடத்தினை பல்வேறு பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்ய முக்கிய காரணமாக இருந்தவர். மடத்தின் வளர்ச்சி கண்டு பொற்காலம் என பலரும் பாராட்டும் வகையில் மேம்பாடு அடைய செய்தவரும் ஆவர்.

கடந்த ஒரு மாதமாக வயது மூப்பு காரணமாக ஸ்ரீ லஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் எனும் முத்துக்குமார சுவாமிகள், உடல் நலம் குன்றி சிகிச்சை பெற்ற நிலையில், திருப்பனந்தாள் மடத்தில் இன்று (19-ஆம் தேதி) இரவு 08:00 மணிக்கு மகா சமாதி அடைந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thiruppanandal Kasimadam Srilasree Kasivasi Ejaman Swamigal has attained Maha Samadhi


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->