வீரமரணம் அடைந்த 'முரளி நாயக்' வாழ்க்கை வரலாறு படம்...!
biopic martyred Murali Nayak
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுக்க நடத்திய ஆபரேஷன் சிந்தூரில் இந்திய ராணுவ வீரர்கள் பலம் மரணமடைந்தனர்.இதில் 22 வயதான வீரர் ''முரளி நாயக்'' வீரமரணம் அடைந்தார்.
இந்நிலையில், ''ஆபரேஷன் சிந்தூர்'' ஹீரோ முரளியின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட இருக்கிறது.இதில் பிக் பாஸ் புகழ் 'கவுதம் கிருஷ்ணா' இதில் முரளி நாயக்காக நடிக்கிறார். மேலும்,கே. சுரேஷ் பாபு இந்த படத்தை விஷான் பிலிம் பேக்டரியின் கீழ் தயாரிக்கிறார்.

இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாக இருக்கிறது.இதில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இப்படம் அறிவிக்கப்பட்டது.
இதன் அறிவிப்பின்போது 'கவுதம் கிருஷ்ணா' பல கருத்துக்களைத் தெரிவித்தார். அப்போது,நம்நாட்டு மக்களுக்காக வீர மரணமடைந்த முரளி நாயக்கின் கதையை உலகிற்குச் சொல்ல இந்த படம் தயாரிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார் .
இது நாட்டையே பெருமைப்படுத்தும் படமாக இருக்கும் என்றும், முரளி நாயக்கின் வேடத்தில் நடிப்பது தனக்கு கிட்டிய அதிர்ஷ்டம் என்று தெரிவித்தார்.
English Summary
biopic martyred Murali Nayak