'துணை ஜனாதிபதி வேட்பாளராக சுதர்சன் ரெட்டியை நிறுத்தியது வரவேற்கத்தக்கது: எம்.பி.க்கள் தங்கள் மனசாட்சிப்படி வாக்களியுங்கள்' என்கிறார் பிரசாந்த் பூஷண்..!
Prashant Bhushan welcomes Sudarshan Reddys nomination as Vice Presidential candidate
எதிர்க்கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டி போட்டியிடுவார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று பிற்பகல் அறிவித்தார்.
இந்நிலையில், சுதர்சன் ரெட்டியை துணை ஜனாதிபதி வேட்பாளராக எதிர்க்கட்சிகள் நிறுத்தி இருப்பது, வரவேற்கத்தக்கது என இந்திய எழுத்தாளர் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண் தெரிவித்துள்ளார்.
அதாவது, நீதித்துறையில் தீர்ப்புகளை வழங்குவதில் சுதர்சன் ரெட்டி சிறந்த நீதிபதியாக இருந்தவர். சுதர்சன் ரெட்டியுடன் ஒப்பிடும்போது தே.ஜ.கூ. வேட்பாளர் ராதாகிருஷ்ணன் ஒன்றும் இல்லை என்று அவர் விமர்சித்துள்ளார். அத்துடன், எம்.பி.க்கள் தங்கள் மனசாட்சிப்படி வாக்களித்து குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பார்கள் என நம்புகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Prashant Bhushan welcomes Sudarshan Reddys nomination as Vice Presidential candidate