சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் பர்தா அணிந்து கொடுவாள், கத்தியுடன் திரிந்த இளைஞர்: கைது செய்யப்பட்டு விசாரணை..! - Seithipunal
Seithipunal


சென்னை பல்கலைக்கழக வளாகத்துக்கு பர்தா அணிந்து கத்தியுடன் சந்தேகத்து இடமான முறையில் சுற்றி திரிந்த வந்த இளைஞர் கைது செய்யப்பட்ட்டுள்ளார்.

சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் வழக்கம் போல் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அண்ணா சதுக்கம் காவல் நிலைய போலீஸார்,  பர்தா அணிந்த நபர் ஒருவர் சந்தேகத்துக்கு இடமான வகையில் அங்கு நடந்து சென்றுள்ளார். அவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். அத்துடன்,  பர்தா அணிந்து வந்தவர் ஆண் என்பதும் தெரியவந்ததும் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதனை தொடர்ந்து போலீஸார் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது அவர், சவுக்கார்பேட்டையைச் சேர்ந்த கரண் மேத்தா என்ற 24 வயது நபர் என தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் சோதனை நடத்தியதில் அவருடைய பையில் இன்று 02 கொடுவாள் மற்றும் ஒரு கத்தி இருந்துள்ளது. இவற்றைப் பறிமுதல் செய்த போலீஸார், காவல் நிலையம் அழைத்து சென்று அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தியுள்ளனர்.

கரண் மேத்தாவின் தந்தை உத்தம் சந்த் கடந்த 08 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துள்ளதாகவும், தாயார் சாந்திதேவி மாற்றுத் திறனாளியாக உள்ளதாகவும், சகோதரிக்கு திருமணமாகி ஐதராபாத்தில் வசித்து வருவதாகவும் கூறியுள்ளார். மேலும், கரண் மேத்தாவின் நெருங்கிய உறவினர் ஒருவர், அவரது குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளையும் செய்து வந்துள்ள்ளார். கரண் மேத்தா அரும்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மாதம் ரூ.72 ஆயிரம் சம்பளத்தில் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில், பங்குச் சந்தை முதலீடு, ஆன்லைன் சூதாட்டம் என அவர் ரூ.24 லட்சம் வரை இழந்துள்ளார். இதனால் நண்பர்களிடம் வாங்கிய கடனை அடைப்பதற்காக தனியார் வங்கியில் ரூ.10 லட்சம் கடன் வாங்கி, மாதந்தோறும் தவணை செலுத்தி வந்துள்ளார். ஆன்லைன் மூலம் சிஏ படித்து வந்த கரண் மேத்தா, தேர்வுக்காக கடந்த 04 மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டு நின்றுள்ளார். இந்தச் சூழலில், நேற்று ஆன்லைன் சூதாட்டத்தில் மேலும் ரூ.1 லட்சம் இழந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த அவர், தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.

அதற்கு முன்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் படிக்கும் அவரது பெண் தோழியைப் பார்த்துவிட்டு, தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவெடுத்துள்ள அவர், இதற்காக வீட்டில் இருந்த கொடுவாள் மற்றும் கத்தியை பையில் வைத்துக்கொண்டு, பர்தா அணிந்து பல்கலைக்கழக வளாகத்துக்கு வந்துள்ளார்.

தொடர்ந்து கரண் மேத்தா கூறியதாவது: பெண் தோழியைப் பார்த்துவிட்டு, மரங்கள் நிறைந்த மறைவான இடத்துக்கு சென்று கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவெடுத்தேன். ஏனெனில், அழுகி, துர்நாற்றம் வீசிய பிறகுதான் எனது உடலை எடுக்க போலீஸார் வருவார்கள். அதற்குள் அடையாளம் தெரியாத வகையில் முகம் அழுகி விடும். இதனால், முகத்தை அடையாளம் காண முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பர்தாவை வைத்து இறந்தது பெண் என்ற முடிவுக்கு போலீஸார் வருவார்கள் என்றும், தான் இறந்த விபரம் என் தாயாருக்குத் தெரியக் கூடாது என்பதற்காக பர்தா அணிந்து வந்தேன் என போலீஸாரிடம் கரண் மேத்தா தெரிவித்துள்ளார். இதையடுத்து, கரண் மேத்தா மீது ஆயுத தடைச் சட்டம், ஆள் மாறட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிந்து கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police arrest youth wearing burqa and carrying knife on Chennai University campus


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->