கமல்ஹாசன் -ரஜினிகாந்த் இருவரையும் வைத்து படம் எடுக்கிறாரா? லோகேஷ் கனகராஜ்
Kamal Haasan and Rajinikanth making a film together Lokesh Kanagaraj
பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் நடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இப்படம் கேங்ஸ்டர் படமாக இருக்க அதிக வாய்ப்புள்ளது என்று தகவல் பரவி வருகிறது.

தற்போது ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கூட்டணியில் வெளிவந்த 'கூலி' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும் பாக்ஸ் ஆபீஸில் வரவேற்பை பெற்று வருகிறது. அதேபோல் கமல்ஹாசனின் 'தக் லைப்' படம் பாக்ஸ் ஆபீஸில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இருவரும் இணைய இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை கிளப்பி வருகிறது.மேலும் இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க முன்வந்துள்ளதாக தெரிகிறது.
இது நடக்கும் பட்சத்தில் ரஜினியும் கமலும் சுமார் 46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றாக நடிக்கும் படமாக இது இருக்கும் என்கின்றனர் ரசிகர்கள்.
மேலும், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் பல படங்களில் ஒன்றாக நடித்திருக்கிறார்கள். 'அபூர்வ ராகங்கள்','பதினாறு வயதினிலே' , 'நினைத்தாலே இனிக்கும்', 'மூன்று முடிச்சு, 'அவர்கள்' ஆகிய படங்களாகும். அவர்கள் கடைசியாக 1979-ல் 'அலாவுதீனும் அற்புத விளக்கும்' திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Kamal Haasan and Rajinikanth making a film together Lokesh Kanagaraj