சென்னையில் பயங்கரம்: குடித்துவிட்டு தினமும் அடி உதை: ஆத்திரத்தில் கணவன் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கொலை செய்த மனைவி..! - Seithipunal
Seithipunal


சென்னையில் மதுபோதையில் தினமும் தகராறு செய்த கணவரை, கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை, கொளத்தூர், லட்சுமிபுரத்தில் வசித்து வந்தவர் 42 வயதான காதர் பாஷா. வரது மனைவி நிலவர் நிஷாவுக்கு 48 வயது. மதுபோதைக்கு அடிமையான காதர் பாஷா தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளதோடு, தினமாகும் அவரை  அடித்தும் உதைத்தும் சித்திராவை செய்து வந்துள்ளதாக கூறப்பற்றுகிறது. இதனால், நிஷா கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

இந்நிலையில், கடந்த 09-ஆம் தேதி இரவு வழமைபோலவே காதர் பாஷா மதுபோதையில் வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த மனைவி நிஷாவிடம் தகராறு செய்து அவரை தாக்கிவிட்டு தூங்க சென்றுள்ளார். கணவனின் தாக்குதலில் காயம் அடைந்த மனைவி நிஷா கடும் ஆத்திரம் அடைந்துள்ளார்.

தினமும் தகராறு செய்து தாக்கி வரும் கணவருக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்பதற்காக, சம்பவத்தன்று நிஷா எண்ணெய்யை பாத்திரம் ஒன்றில் கொதிக்க வைத்துள்ளார். அதனை, நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த கணவர் முகத்தில், அந்த கொதிக்கும் எண்ணையை ஊற்றியுள்ளார்.

இதனை சற்றும் எதிர்பாராத கணவன் காதர் பாஷா வலியால் துடித்து கதறியுள்ளார்.  அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒடி வந்து அவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காதர் பாஷா சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். இந்த விவகாரம் தொர்பாக, புழல் போலீஸார் கொலை வழக்காக பதிவு செய்து மனைவி நிலவர் நிஷாவை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் சென்னை, கொளத்தூர், லட்சுமிபுரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A wife in Chennai poured boiling oil on her drunken husband and murdered him after they argued every day


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->