நாமக்கல்லில் 09 ஆமைகளை உயிருடன் எரித்துக் கொன்ற இளைஞர்கள் அதிரடியாக கைது; ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு..!
Youths burned 9 turtles alive in Namakkal arrested fined Rs1 lakh
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந் அஜித் (26) மற்றும் குமார் (25) ஆகிய நண்பர்கள், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள அண்ணா நகர் பகுதியில் உள்ள ஒரு தேங்காய் குடோனில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் நாமக்கல் அருகே காவிரி கரையோரத்தில் 09 ஆமைகளை பிடித்து, உயிருடன் எரித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும், கடந்த 08-ஆம் தேதி அனிச்சம்பாளையம் கரையோரத்தில் இருந்த 09 ஆமைகளை உயிருடன் பிடித்து வந்துள்ளனர். பின்னர், அங்குள்ள வனத்துறைக்கு சொந்தமான குட்டுக்காடு பகுதியில், அந்த ஆமைகளை உயிருடன் எரித்துள்ளனர். அத்துடன், அதனை செல்போனில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்து தங்களது நண்பர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த போட்டோ மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையறிந்த நாமக்கல் வனத்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விசாரணை நடத்தியுள்ளனர். அங்கு குமார் மற்றும் அஜீத் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அவர்கள் கறிக்காக ஆமைகளை உயிருடன் எரித்து கொன்றதாக கூறியுள்ளனர். இதனையடுத்து, இருவரையும் கைது செய்த வனத்துறையினர், தலா ரூ.50,000 வீதம், ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.
English Summary
Youths burned 9 turtles alive in Namakkal arrested fined Rs1 lakh