பிரபல நடிகையின் மகன் மாடியிலிருந்து குதித்து மரணம்! டியூசனுக்கு போக சொன்னதால் விபரீதம்!
maharastra actress son death
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கண்டிவலியில் ஒரு மெட்ரோ அபார்ட்மெண்டில் 51-ஆவது மாடியில் வசித்து வந்த ஒரு பிரபல இந்தி மற்றும் குஜராத்தி சீரியல்களில் நடித்த நடிகையின் குடும்பத்தில் ஏற்பட்ட துயர சம்பவம் அப்பகுதியையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகையின் 14 வயது மகன், பள்ளியில் கல்வி பயின்றுவந்தான். நேற்று மாலை 7 மணியளவில், அவர் டியூசனுக்கு செல்லும்படி தாயால் வற்புறுத்தப்பட்டார். முதலில் மறுத்திருந்தாலும், தொடர்ந்த வற்புறுத்தலுக்குப் பிறகு வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால், டியூசனுக்கு செல்லாமல், 51-ஆவது மாடியில் இருந்து 50-ஆவது மாடிக்கு இறங்கி வந்ததும், அங்கிருந்து கீழே பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
மகன் சென்றுவிட்டதாக எண்ணிய நடிகை, வாட்ச்மெனின் தகவலால் சம்பவத்தை அறிந்து கீழே ஓடி வந்தபோது, தனது மகன் ரத்தக்குளத்தில் உயிரிழந்ததை பார்த்து அதிர்ச்சியில் கதறினார்.
இது தொடர்பாக போலீசார் தற்செயலான மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஏதாவது சந்தேகத்திற்கிடமான தடயங்கள் இதுவரை கிடைக்கவில்லை என தெரிவித்துள்ள போலீசார், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
maharastra actress son death