போதைப்பொருள் வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி..!
Actor Srikanth and Krishnas bail pleas rejected in drug case
போதை பொருள் பாவனை தமிழகத்தில் சமீப காலமாக அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி, கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த மாதம் 23-ஆம் தேதி கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழ் சினிமா துறையில் கலக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இதனை அடுத்து அதே வழக்கில் கடந்த 26-ஆம் தேதி நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டார்.
சென்னை நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்ட இவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். நடிகர் ஸ்ரீகாந்தை ஜூலை 07-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-zywbv.png)
இந்நிலையில் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா இருவரும் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இருக்க கூடிய சென்னை போதைப்பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்க கூடிய சிறப்பு நீதிமன்றத்தில் தனித்தனியே ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த ஜாமின் மனு மீதான விசாரணை நீதிபதி ஷர்மேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவ பரிசோதனையில் கிருஷ்ணா போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என முடிவு வந்துள்ளதாகவும், கிருஷ்ணாவின் கைது நடவடிக்கை அடிப்படை உரிமை மீறிய செயல் என்றும் நடிகர் கிருஷ்ணா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்வாதிட்டார். மேலும் எதன் அடிப்படையில் கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார் என்ற காரணம் தெரிவிக்கப்படவில்லை என்றும் அவருடைய வாதத்தில் குறிப்பிட்டார்.
-s9dfz.png)
அத்துடன், நடிகர் ஸ்ரீகாந்த் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்ரீகாந்த் இடமிருந்து போதைப்பொருள் எதும் கைப்பற்றப்படவில்லை எனவும், போதைப்பொரூள் பதுக்கிவைத்திருப்பதற்கு, பயன்படுத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது எனவும் வாதிட்டார்.
குறித்த இரண்டு மனுக்கள் விசாரணையிலும் காவல்தூறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அத்துடன், இவர்களுக்கும் போதைப்பொருள் விற்பனைக்கும் தொடர்பு உள்ளதற்கான ஆதாரங்கள், சாட்சிகள் உள்ளதாகவும் தெரிவித்து, இவர்கள் 02 ஜாமின் மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வாதிட்டார்.
இதனை அடுத்து 02 பேரின் ஜாமின் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைப்பதாக நீதிபதி தெரிவித்தார். தற்போது இவர்களின் ஜாமீன் மனுவை சென்னை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
English Summary
Actor Srikanth and Krishnas bail pleas rejected in drug case