உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் சர்மா நியமனம்; நவம்பர் 24இல் பதவியேற்பு..!
Suryakant Sharma appointed as the 53rd Chief Justice of the Supreme Court
உச்சநீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் அவரை தலைமை நீதிபாதியாக உத்தரவிட்டுள்ளார். தலைமை நீதிபதிகள் 65 வயதை எட்டும்போது ஓய்வு பெறுவார்கள்.
தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வரும் நவம்பர் 23ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். அதனைத்தொடர்ந்து நவம்பர் 24-ஆம் தேதி சூர்யகாந்த் பதவியேற்பார் என சட்டத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அன்றிலிருந்து சூர்யகாந்த் சர்மா 2027 பிப்ரவரி 09-ஆம் தேதி வரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார்.
தலைமை நீதிபதியாக நவம்பர் 24-ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் சூரியகாந்த் சர்மா பதவியேற்கவுள்ளார்.

சூர்யகாந்த் 1962-ஆம் ஆண்டில் அரியானா மாநிலத்தில் ஹிசார் மாவட்ட கிராமமான பெட்வாரில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். 1981ஆம் ஆண்டில் ஹிசாரில் உள்ள அரசு முதுகலை கல்லூரியில் பட்டம் பெற்ற இவர், 1984-ஆம் ஆண்டில் ரோத்தக்கில் மகரிசி தயானந்த பல்கலைக்கழகத்தில் இளங்கலைச் சட்டப் பட்டம் பெற்றார். 2011-ஆம் ஆண்டில் குருசேத்திரா பல்கலைக்கழகத்தில் முதுகலை சட்டப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சிப்பெற்றார்.
இவர் நீதிபதியாகப் பதவி உயர்வு பெறுவதற்கு முன்பு, ஒரு மூத்த வழக்கறிஞராக இருந்தார். மேலும் அரியானா அரசின் தலைமை வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.
English Summary
Suryakant Sharma appointed as the 53rd Chief Justice of the Supreme Court