அமெரிக்காவிடம் இருந்து ஆண்டுதோறும் 25 மில்லியன் மெட்ரிக் டன் சோயாபீன்ஸ்களை இறக்குமதி செய்ய சீனா ஒப்புதல்..!
China approves annual import of 25 million metric tons of soybeans from the US
அமெரிக்கா - சீனா இடையே வர்த்தகம் தொடர்பான மோதல் நீடித்து வருகின்ற நிலையில், ஆண்டுதோறும் 25 மில்லியன் மெட்ரிக் டன் அமெரிக்க சோயா பீன்களை வாங்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கு சீனா வரி விதித்தது. அதிலுள்ள குறிப்பாக சோயாபீன்ஸ்க்கு அதிக வரி விதித்தது. இதனால் அமெரிக்க சோயாபீன்ஸ் உற்பத்தியாளர்களுக்கு கிடைக்கும் கொள்முதல் விலை குறைந்ததால், அமெரிக்க விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
இந்த சூழலில், இந்த விவகாரம் தொடர்பாக சீன அதிபர் ஜி ஜின் பிங்கை சந்தித்து பேசுவேன் என்றும், அப்போது சோயாபீன்ஸ் தான் முக்கிய விவாதப் பொருளாக இருக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். இந்நிலையில் இன்று (அக்டோபர் 30) தென்கொரியாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அதிபர் டிரம்ப் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்நிலையில், ஆண்டுதோறும் 25 மில்லியன் மெட்ரிக் டன் அமெரிக்க சோயாபீன்களை வாங்க சீனா ஒப்புக்கொண்டுள்ளதாக என அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அமெரிக்க விவசாயிகளுக்கு இருந்த பெரும் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.
இது குறித்து ஸ்காட் பெசென்ட் கூறியதாவது: 'அதிபர் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் பேச்சுவார்த்தையின் போது ஏற்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் 25 மில்லியன் மெட்ரிக் டன் அமெரிக்க சோயாபீன்ஸ்களை வாங்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது. சீனா இப்போது முதல் ஜனவரி வரை அமெரிக்காவிலிருந்து 12 மில்லியன் மெட்ரிக் டன் சோயாபீன்ஸ்களை வாங்கத் தொடங்கும்.' என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
China approves annual import of 25 million metric tons of soybeans from the US