30 ஆண்டுக்குப் பின் அமெரிக்காவில் அணு ஆயுத சோதனை: டிரம்ப் உத்தரவு; ரஷ்யா, சீனாவை பார்த்து பயமா..?
Trump orders nuclear weapons test in the US after 30 years
ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் தங்கள் அணு ஆயுதங்களை சோதித்து வருகின்றன. இந்நிலையில் தங்கள் அணு ஆயுதங்களை சோதிக்க தொடங்குமாறு ராணுவத்துக்கு அறிவுறுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்தில் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அணு சக்தியில் இயங்கும் ஏவுகணை சோதனையை ரஷ்யா மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து, அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் அணுசக்தியால் நீருக்கடியில் இயங்கும் ட்ரோனும் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

அடுத்ததாக, சீனாவும் தங்கள் அணு ஆயுத பலத்தை விரைவாக அதிகரித்து வருகின்றது. ரஷ்யா , சீனா போன்ற நாடுகள் அணு ஆயுதத்தை சோதித்து வருவதாக தெரிவித்த டிரம்ப், இன்னும் ஐந்து ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு இணையாக வளர்ந்துவிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். டிரம்பின் இந்த நடவடிக்கை உலக அரங்கில் மிகுந்த கவலையையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் அணுஆயுத சோதனை முடிவு, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா இடையே அணு ஆயுதப் போட்டியை துாண்டி விடும் என நிபுணர்கள் கருத்து கூறியுள்ளனர். கடந்த 1992-ஆம் ஆண்டு முதல் அணு ஆயுத சோதனைகளை அமெரிக்கா நிறுத்தி வைத்திருந்த நிலையில், மீண்டும் அங்கு சோதனை நடத்த டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Trump orders nuclear weapons test in the US after 30 years