பழனி முருகன் கோவிலில் உயிருடன் நயன்தாரா, உலகை தூக்கிக் கொண்டு, விக்னேஷ் சிவன் சாமி தரிசனம்..! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு உயிர் மற்றும் உலக் ஆகிய 02 மகன்கள் உள்ளனர். தற்போது 'மூக்குத்தி அம்மன்-2' திரைப்படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார்.

இந்நிலையில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் தம்பதியினர் இன்று தங்கள் குழந்தைகளான உலக் மற்றும் உயிருடன் பழனி முருகன் கோவிலுக்கு தரிசனத்திற்கு சென்றுள்ளனர். மலையடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலம் அவர்கள் மலைக்கோவிலுக்கு சென்றனர். சிறப்பு தரிசன வழியில் சாமி தரிசனம் செய்ய அவர்களை கோவில் ஊழியர்கள் அழைத்து சென்றனர். அங்கு பழனி முருகனை தரிசனம் செய்த பின்னர், கோவில் நிர்வாகம் சார்பில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதிக்கு பிரசாதங்கள் மற்றும் சாமி படங்கள் வழங்கப்பட்டன.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nayanthara and Vignesh offer darshan of Lord Shiva alive at Palani Murugan Temple


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->